இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தக முடிவின்போது, சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவைச் சந்தித்தன.
அந்தச் சரிவு இன்றும் தொடர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு 9.74 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேர்ந்துள்ளது. முக்கிய நிறுவன பங்குகள் அனைத்தும் சரிந்துள்ளதைத் தொடர்ந்து, 539 நிறுவனப்பங்குகள் ஒரு வருடம் கண்டிராதச் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 1,650 நிறுவனப்பங்குகள் சரிவையும், 779 நிறுவனப் பங்குகள் உயர்வையும் சந்தித்துள்ளன.