மூன்றாம் காலாண்டு அதாவது அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 விழுக்காடாக இருந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 2020ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீண்டும் சரியவாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
2012-13 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவிகிதம் இருந்தது. அதன்பின் 2019 ஆண்டின் மூன்றாவது காலாண்டில்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாகச் சரிந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.