மும்பை:இந்தியாவில் தங்கத்தின் தேவை ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 70 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில், நாட்டில் தங்கத்தின் தேவை என்பது 213.2 டன்னாக இருந்தது. ஆனால் தற்போது தேவை என்பது 63.7 டன்னாக குறைந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில், 26 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு தங்கத்தின் தேவை இருந்தது. இது, 2019 ஆண்டு தேவையான 62 ஆயிரத்து 420 கோடி ரூபாயை வைத்து ஒப்பிடுகையில், 57 விழுக்காடு குறைவாகும்.