தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பெரும் சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச் சந்தை

பெரும் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, ஐரோப்பிய பங்குச்சந்தைகளின் தாக்கம் காரணமாக தனது வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தது.

Indian Stock market
Indian Stock market

By

Published : Jun 12, 2020, 6:10 PM IST

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 1,190 புள்ளிகள் குறைந்து தனது வர்த்தகத்தை தொடங்கியது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியதால், அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வர்த்தக நாள் இறுதியில் இந்திய பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டது.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242.52 புள்ளிகள் (0.72 விழுக்காடு) அதிகரித்து 32,348.10 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.90 புள்ளிகள் (2.12 விழுக்காடு) அதிகரித்து 9,972.90 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

எம்&எம் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ஏழு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதேபோல் பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றமடைந்தன.

மறுபுறம், ஓ.என்.ஜி.சி, டெக் மஹேந்திரா, பவர் கிரிட், இன்போசிஸ், கோடக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

காரணம் என்ன?

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையும் ஆசிய பங்குச் சந்தையும் சரிவில் தொடங்கியதால், இந்திய பங்குச் சந்தையும் காலை சரிவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும் மதியம், ஐரோப்பிய பங்குச் சந்தை ஏற்றத்தில் தொடங்கியதால், அதன் தாக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தையும் இறக்கத்திலிருந்து மீண்டதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பங்குச் சந்தை

அமெரிக்க பங்குச் சந்தையைப் போலவே ஷாங்காய், சியோல், ஹாங்காங், டோக்கியோ ஆகிய பங்குச் சந்தைகள் சுமார் இரண்டு விழுக்காடு வரை சரிவை சந்தித்தன.

இருப்பினும் பாரிஸ், பிராங்பேர்ட், லண்டன் ஆகிய ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.83 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 38.86 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அமேசானின் இந்த சேவை இலவசம்

ABOUT THE AUTHOR

...view details