மூத்த குடிமக்களுக்கு சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) 2004ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஆபத்து இல்லாத முதலீட்டை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஐசிஐசிஐ வங்கி சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்கள் இரண்டு கோடி ரூபாய்க்கும் கீழ், முதலீடு செய்திருந்தால், ஆண்டுக்கு அவர்களுக்கு 6.55 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்பதே அது.