உலகின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ’ஹீரோ மோட்டோ கார்ப்’ தனது உற்பத்தி மையத்தை தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆந்திர மாநிலத்தில் தொடங்கியுள்ளது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் ரூ .1,600 கோடி செலவில் இந்நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 18 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் இந்த மையம் 600 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநில அரசின் சார்பில், இந்த நிறுவனத்திற்காக நிலத்தை ஒதுக்கியிருந்தார்.