கூகுள் நிறுவனம் நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்த ஷாப்பிங் சேவையை தொடங்கி, மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. அதன்மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து, இணையதள முன்னோடியான கூகுளும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்கியுள்ளது.
கூகுளின் அடுத்த அறிவிப்பு இதுதானா! - கூகுள்
வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் தற்போது ஷாப்பிங் பகுதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Google launches online shopping platform
அதன்படி, கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியிலேயே ஷாப்பிங் பகுதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கூகுள் பயனாளர் தேடும் பொறியில் எந்த ஆன்லைனில் எல்லாம் விற்பனை ஆகிறதோ அவையெல்லாம் பயனாளருக்கு வந்தடையும் வண்ணம் உள்ளது. இதன் மூலம் ஒரு பொருளின் விலையையும் தரத்தையும் ஒரு இடத்திலேயே பெற முடியும்.
இதில் பல பொருட்களுக்கு கூகுள் கேரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முழுவதுமாக அமெரிக்கா, ஃபிரான்ஸில் வந்துள்ளது.