கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் பெருநிறுவனங்களில் முதலீடு செய்ய தயங்கிய முதலீட்டாளரின் பார்வை தங்கம் பக்கம் திரும்பியது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துவருவதால், தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிரது.
டெல்லியில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 340 ரூபாய் உயர்ந்து 53,611 ரூபாயாக உள்ளது. முன்னதாக, நேற்று 10 கிராம் தங்கம் 53,271 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்தது. நேற்று 68,514 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,306 ரூபாய் உயர்ந்து 69,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.