சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து நான்காயிரத்து 374 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.112 ரூபாய் உயர்ந்து 34 ஆயிரத்து 992 ரூபாய் என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு நான்காயிரத்து 738 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 37 ஆயிரத்து 904 ரூபாய் என விற்பனையாகிறது.நேற்றைய (செப். 20) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 34 ஆயிரத்து 880 ரூபாய் என விற்பனையானது.