தங்கத்தின் விலை பொருள் வணிகச் சந்தையில் 10 கிராம் எடைக்கு ரூ.46 ஆயிரத்து 785 ஆக வர்த்தகமானது. இதுவே வணிகச் சந்தையில் தங்கம் இதுவரையில் கண்ட உச்ச உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா நோய்க் கிருமித் தொற்று உலக மக்களைப் பாடாய் படுத்திவருகிறது. மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கிய கரோனா, உலக வணிகத்தையும் ஒரு கை பார்த்துவிட்டது. தொழில்கள் முடங்கிய நிலையில், உலக வர்த்தகம் ஒரு நிச்சயமற்றத் தன்மையுடன் திக்குமுக்காடிவருகிறது.