டெல்லி: தேசிய தலைநகரில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 614 குறைந்து 52,314 ரூபாயாக இருந்தது.
சரிவில் தங்கம் விலை; ரூ. 614 குறைவு! - தங்கம் விலை நிலவரம்
சர்வதேச விலைகள் சரிவைத் தொடர்ந்து டெல்லியில் 24 காரட் விலை தங்கத்தின் விலை ரூ. 614 குறைந்துள்ளது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ. 1,799 சரிந்து ரூ. 71,202ஆக இருந்தது.
தங்கம் விலை நிலவரம்
முந்தைய வர்த்தகத்தில், தங்கம் 10 கிராமுக்கு 52,928 ரூபாயாக நிறைவுப் பெற்றிருந்தது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ .1,799 குறைந்து ரூ .71,202 ஆக இருந்தது.
சர்வதேசச் சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,963 அமெரிக்க டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் 27.87 அமெரிக்க டாலராகவும் இருந்தது. அமெரிக்காவும் சீனாவும் உற்பத்தி நடவடிக்கைகளில் மீட்சியைக் காட்டிய பின்னர் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.
Last Updated : Sep 2, 2020, 9:02 PM IST