கடந்த சில நாள்களாக தங்கம், வெள்ளியின் விலை ஏறுமுகமாக உள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூலை 15) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.432 அதிகரித்து, ரூ. 36,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூலை 14) ஒரு கிராம் தங்கம் ரூ. 4,521-க்கு விற்பனை ஆன நிலையில், தற்போது ரூ. 54 அதிகரித்து ரூ. 4,575-க்கு விற்பனையாகிறது.
கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை சவரன் ரூ.36,000-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது ரூ.36,500ஐ தாண்டி விற்பனை ஆகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,500-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க:ரூ.5 லட்சம் வரை கரோனா சிகிச்சைக்கு கடன் - வங்கிகள் புதுத்திட்டம்