தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

காயின் டிசிஎக்ஸ்: மெய்நிகர் பணம் குறித்த தகவல்கள் சைகை மொழியில்! - DCX Learn

காது கேளாதோருக்கான சைகை மொழி திட்டத்தினை, மெய்நிகர் பண வர்த்தக நிறுவனமான காயின் டிசிஎக்ஸ் அறிமுகப்படுத்தியது. இந்த முறை மூலம் அனைவரும் மெய்நிகர் வர்த்தகத்தில் இணைய வாய்ப்பு கிடைக்கும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

CoinDCX launches sign language learning module on crypto currency
CoinDCX launches sign language learning module on crypto currency

By

Published : Sep 23, 2021, 10:57 PM IST

மும்பை: உலக சைகை தினத்தை முன்னிட்டு, மெய்நிகர் பண வர்த்தக நிறுவனமான காயின் டிசிஎக்ஸ் காது கேளாதோருக்கான சைகை மொழி திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

யுனிகீ எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தினை காயின் டிசிஎக்ஸ் செயல்படுத்தியுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனமான 'யுனிகீ', தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் சேவைகளை அளித்து வருகிறது.

இந்த சேவையை அனுபவிக்க, பயனாளிகள் "DCX Learn" எனும் யூ- ட்யூப் பக்கத்தில் இணைந்து மெய்நிகர் பணம் குறித்த அனைத்து தகவல்களையும் இலவசமாக அறிந்துகொள்ளலாம்.

அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், #TryCrypto மிஷன் எனும் தொலைநோக்கு இலக்கை அடைய நிறுவனம் முனைப்பு காட்டிவருகிறது.

அதுமட்டுமில்லாமல், 5 கோடி இந்தியர்களை மெய்நிகர் வர்த்தகத்தில் இணைக்கும் உத்வேகத்தில் காயின் டிசிஎக்ஸ் இறங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details