மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 637.49 புள்ளிகள் (2.03 விழுக்காடு) உயர்ந்து 32,008.61 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் (2.03 விழுக்காடு) உயர்ந்து 9,383.55 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் ஏழு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதேபோல் அல்ட்ராடெக் சிமென்ட், எல் & டி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எம் & எம், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தைச் சந்தித்தன.
மறுபுறம், நெஸ்லே இந்தியா, பாரதி ஏர்டெல், சன் பார்மா, ஹெச்.யூ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
காரணம் என்ன?
பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.