சீனாவில் தொடங்கி, தற்போது உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோயால் நாட்டில், இதுவரை 59 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சி உண்பது மூலம் கோவிட்-19 பரவுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் காட்டுத்தீப்போல் பரவி வருகின்றன.
இவை பொய்யென மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில், கடந்த சில வாரங்களாக கோழி இறைச்சியின் விற்பனை 30 முதல் 35 விழுக்காடு வரை சரிந்துள்ளதாகவும், பிராய்லர் சிக்கன் விலை 50 விழுக்காட்டுக்கும் குறைவாக விற்கப்படுவதாகவும் மொத்த விலை வியாபாரிகளும், உணவு நிறுவனங்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.