மத்திய வரி மற்றும் கடமைகளில் மாநிலங்களின் பங்கை பகிர்வதற்கு மே மாத தவணைக்கு 46 ஆயிரத்து 38 கோடியே 70 லட்சம் ரூபாயை அனுமதித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வசூலிக்கப்படும் வரி ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் மே மாத பங்கீட்டு தொகையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
28 மாநிலங்களுக்கு மொத்தமாக 46 ஆயிரத்து 38 கோடியே 70 லட்சம் ரூபாயை விடுவித்துள்ளது நிதியமைச்சகம். இதற்கான உத்தரவையும் மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த தொகை மொத்தம் உள்ள 28 மாநிலங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக ஒதுக்கீடு: ஆந்திர மாநிலத்திற்கு ஆயிரத்து 892.64 கோடி, அசாம் மாநிலத்திற்கு ஆயிரத்து 441.48 கோடி, குஜராத் மாநிலத்துக்கு ஆயிரத்து 564.4 கோடி, மேற்கு வங்க மாநிலத்திற்கு 3 ஆயிரத்து 461.65 கோடி, கேரளாவிற்கு 894.53 கோடி, பிகாருக்கு 4 ஆயிரத்து 631.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்துக்கு 8 ஆயிரத்து 255.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நினைவக இழப்பைத் தடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு' - ஐஐடி கெளகாத்தி