தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அதிரடி காட்டும் பர்கர் கிங் - முதல் நாளே இரட்டிப்பான பங்குகள் - தேசிய பங்குச்சந்தை

டெல்லி: பர்கர் கிங் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முதல் நாளே சுமார் 120 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து வர்த்தகமாகிவருகிறது.

Burger King India
Burger King India

By

Published : Dec 14, 2020, 1:06 PM IST

அமெரிக்காவின் பர்கர் கிங் நிறுவனம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் பர்கர் கிங் நிறுவனத்திற்கு 250-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

வரும் ஆண்டுகளில் இந்தியா மிக முக்கியச் சந்தையாக உருவெடுக்கும் என்று கருதும் பர்கர் கிங், அதற்கு ஏற்றவகையில் பல்வேறு விரிவாக்கப் பணிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்க பங்குச் சந்தையில் பெற முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, ஆரம்ப பொது வழங்கலில் (Initial Public Offering - IPO) அந்நிறுவனத்தின் பங்குகள் 59-60 ரூாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. மேலும், IPO-வில் பர்கர் கிங் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், இன்று (டிச. 14) முதல்முறையாக பர்கர் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கின. ஆரம்பகட்ட வர்த்தகத்தின்போதே 80 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து வர்த்தகமான பர்கர் கிங் பங்குகள், மதியம் ஒரு மணியளவில் 124 விழுக்காடு உயர்ந்து 134.50 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இதன்மூலம் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4,500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக ஆரம்ப பொது வழங்கலில் பர்கர் கிங் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் துறைக்கான கடனுதவியை அதிகப்படுத்த வேண்டும்: அமிதாப் கந்த்

ABOUT THE AUTHOR

...view details