இறுதியில் இன்று மாலை, மும்பை பங்குச் சந்தை எண் சென்செக்ஸ் 988 புள்ளிகள் குறைந்து 39,735 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 374 புள்ளிகள் குறைந்து 11,661 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை மீட்க பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததால், முதலீட்டாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதுவே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாகக் கருதப்படுகிறது.