இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த நிறுவனம் ஏர்டெல். பின் ஜியோவின் வருகை காரணமாகத் தொலைத்தொடர்புத் துறையில் கடும் போட்டி ஏற்பட்டது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு வழங்கியதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபம் பெருமளவு குறைந்துள்ளது.
2019-20ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 5,237 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 107.2 கோடி ரூபாய் லாபம் அடைந்திருந்தது.
2018-19ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 20,602.2 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் காலாண்டில் வருவாய் சுமார் மூவாயிரம் கோடி அதிகரித்து 23,722.7 கோடி ரூபாயாக உள்ளது.