நாட்டின் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் வர்த்தகச் சூழலை பெரிதும் பாதித்துள்ள நிலையில் பங்குச் சந்தைகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில் ஆசிய பங்குகள் அனைத்தும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்து 39,000க்கும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 11,500க்கு வர்த்தமாகி வருகின்றன.
சிறப்பாக செயல்படும் பங்குகளில் மாருதி சுசுகி, ஐசிஐசிஐ, டாடா ஸ்டீல் பவர் கிரிட் மற்றும் எல் & டீ இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பிறகு சரிவை சந்தித்து வந்த ஆட்டோமொபைல் வங்கி பங்குகள் இந்த வாரம் மீண்டு எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து 15 மாதங்களாக அமெரிக்கா - சீனா இடையே நடக்கும் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்தது. இனி ஒரே நாளில் பங்குச் சந்தைகள் உயர்வைக் காணும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பங்குச்சந்தையில் புதிய உச்சத்தை தொட்ட இந்தியாமார்ட் பங்கு!: