தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஹெச்.டி.எஃப்.சி ஆதித்யா புரி தனது 842.87 கோடி மதிப்புள்ள 74 லட்ச பங்குகளை விற்றார்! - tamil business news

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை இயக்குநரான ஆதித்யா புரி தன்னிடம் உள்ள 842.87 கோடி மதிப்புள்ள 74 லட்ச பங்குகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதன் விற்பனை ஜூலை 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா புரி
ஆதித்யா புரி

By

Published : Jul 27, 2020, 8:52 PM IST

மும்பை:ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை இயக்குநரான ஆதித்யா புரி தன்னிடம் உள்ள 842.87 கோடி மதிப்புள்ள 74 லட்ச பங்குகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

இதன் விற்பனை ஜூலை 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். தான் ஓய்வுபெற இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தன்னிடம் மொத்தமாக உள்ள 77.96 லட்ச பங்குகளில் இருந்து 74.20 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். தற்போது தன்வசம் நிறுவனத்தின் 0.01 விழுக்காடு, அதாவது 3.76 லட்சம் பங்களை வைத்துள்ளார். அதன் தற்போதைய மதிப்பு 42 கோடி ரூபாய் ஆகும்.

இன்ஸ்டாகிராம் நிதிதிரட்டல்: தனிபட்ட நிதி தேவைகளுக்கு பணம் திரட்டலாம்!

2020ஆம் ஆண்டின் குறைந்தபட்ச விலையை எட்டிய ஹெச்.டி.எஃப்.சி பங்குகள், இவரின் இந்த விற்பனை முடிவால், பங்குகளின் விலை சற்று ஏற்றத்தைக் கண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details