கரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவிலான பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. உலக பொருளாதார பெருஞ்சக்திகளான சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கரோனா வைரஸால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் கடும் பொருளாதார சரிவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு உலக மந்தநிலையைவிட தற்போதைய சூழல் மோசமாகவுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தச் சூழல் குறித்து சர்வதேசம் நிதியத்தின் ஆய்வு மேற்கொண்டு அதன் விவரத்தை கிரிஸ்டலினா ஜார்ஜிவியா நேற்று (ஏப்ரல் 17) வெளியிட்டார். அதன்படி, உலகின் முன்னணி பொருளாதார பெரும் சக்திகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட ஜி - 20 நாடுகள் கரோனா வைரஸால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இது 2020ஆம் ஆண்டை பொருளாதார வீழ்ச்சிக்குரிய ஆண்டாக மாற்றியுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் எழுந்துள்ள இந்த சவால், ஆண்டு முழுவதும் நீடிக்கும். அத்துடன் இது சீரடைவதற்கு 2021ஆம் ஆண்டின் இறுதிவரை பிடிக்கும் எனக் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த தேக்கம், வளரும் பின்தங்கிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு பிந்தைய உலகம் கண்டுள்ள பெரும் மாற்றங்கள் என்ன? ஒரு அலசல்