தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2019: மகளிர் முன்னேற்றத்திற்கான அறிவிப்பு! - பெண்கள் முன்னேற்றம்

மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வங்கி கடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Budget2019

By

Published : Jul 5, 2019, 1:42 PM IST

நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மகளிர் முன்னேற்றத்திற்காக சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அவை கீழ் வருமாறு,

  • மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் ஜன்தன் கணக்கு வைத்திருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும்.
  • ஒவ்வொரு குழுவிலும் ஒரு தகுதியான மகளிருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும்.
  • இத்திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் சென்றடையும்.
  • நாடாளுமன்றத்தில் 78 பெண் எம்பி-க்கள் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி வாகையைச் சூடியுள்ளனர்.
  • அரசு மகளிர் முன்னேற்றத்திற்குத் தேவையான வசதிகளையும் செய்து தரும்.
  • மகளிர் முன்னேற்றம் இல்லாமல் உலக நலன் மேம்படாது.
  • பெண்களும், ஆண்களுக்கு நிகராக அரசின் கொள்கைகள் முடிவுகளை தீர்மானிப்பதில் பங்கேற்கின்றனர்.
  • இந்திய சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் மகளிருக்குத் தனி இடமுண்டு.

ABOUT THE AUTHOR

...view details