தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'வளர்ச்சியை ஏற்படுத்தும், ஆனால்...' - ராகுல் திட்டம் பற்றி ரகுராம் ராஜன்

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் திட்டம் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியாமா என்பதை பார்க்க வேண்டும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்

By

Published : Mar 27, 2019, 10:16 AM IST

குறைந்தபட்ச வருமானம்

ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதிதான் தற்போது ஊடகங்களில் மையப்புள்ளியாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதன்மூலம் 25 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றும் இது வறுமைக்கு எதிரான கடைசி போர் எனவும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்று வேலை

இது வழக்கம் போல் காங்கிரஸின் ஏமாற்று வேலை, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது என பாஜக விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சியாக பாஜவின் விமர்சனம் இவ்வாறாக இருந்தாலும் பொருளாதார நிபுணர்கள் பலரும் இந்த திட்டம் குறித்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். நாட்டிலுள்ள பொருளாதார சூழலில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை, இந்த திட்டத்தால் அரசின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறி வருகின்றனர்.

ரகுராம் ராஜன் என்ன சொல்கிறார்?

இந்த திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தியின் இந்த திட்டம் அடிமட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். "சரியான விதத்தில் அமல்படுத்தினால் இந்த திட்டம் புரட்சியை ஏற்படுத்தும், அடிமட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன்மூலம் மக்கள் தங்களுக்கான பொருளாதார தேவையை தாங்களே முடிவு செய்யலாம். எல்லாவற்றிற்கும் அரசை நம்பியிருக்க வேண்டியதில்லை.

ஆனால் இதை எப்படி செயல்படுத்தப்போகிறார்கள்? ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுடன் இந்த திட்டமும் கூடுதலாக செயல்படுத்தப்படுமா? அல்லது அவற்றுக்கு பதிலாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு புரட்சியை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் திட்டங்களோடு கூடுதலாக வந்தால் அரசால் அந்த நிதிச்சுமையை ஏற்க முடியாது. அவ்வாறு செய்தால் அரசுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். தேர்தலுக்குப் பிறகே அரசு இதுகுறித்து முடிவெடுக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details