தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை! - Finance Minister Nirmala Sitharaman

டெல்லி: பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நான்கு நாட்களில் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு...

Nirmala
Nirmala

By

Published : May 17, 2020, 10:24 AM IST

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம். அதன்படி அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இரண்டு மாதம் உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும்.
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்தில் 23 மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குள் 83 விழுக்காடு மக்கள் பயனடைவார்கள்.
  • சாலையோர வியாபாரிகள் கடன்பெறும் வகையில் விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.10 ஆயிரம் தொடக்க செயல்பாட்டு மூலதனத்துடன் கடன் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
  • ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை கொண்ட நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் மானியக் கடன் வழங்கப்படும். இதனால் 3.3 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
  • நபார்டு வங்கி மூலம் சிறு விவசாயிகள் பயனடையும் வகையில் 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. இந்த கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும்.
  • வருமான வரி தாக்கல் செய்ய மேலும் மூன்று மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு மூலதன கடன் வழங்கப்படும்.
  • குறு சிறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இந்தத் திட்டம் அக்டோபர் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.
  • வேளாண்துறை தொடர்பான 11 முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன. இதன்மூலம், வேளாண்துறையின் அடிப்படை கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவுள்ளன. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 8 திட்டங்கள், நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள்.
  • பிரதமர் கிசான் நிதியிலிருந்து ரூ.18,700 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • விவசாயக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு. அறுவடைக்கு பிந்தைய காலத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படும்.
  • உணவு உற்பத்தி செய்யும் சிறு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் சுமார் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.
  • மீனவர்கள் நலனுக்காக மீன்வளத்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அதன்படி கடல் மீன்பிடிப்பு, உள்ளூர் மீன்பிடிப்பு, மீன் பண்ணைகள் மேம்பாட்டிற்கு ரூ.11,000 கோடியும், மீன்பிடி துறைமுகம், மீன் பதப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.9,000 கோடியும் ஒதுக்கீடு. இதன் மூலம் 55 வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
  • கால்நடை தடுப்பூசியை 100 விழுக்காடு செயல்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்திற்கு ரூ.13,343 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
  • மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு நிதி ஒதுக்கீடு. ஆப்பரேஷன் பசுமைத் திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாய உற்பத்தி பொருட்களை குளிர்சாதன கிடங்கில் பதப்படுத்த 50 விழுக்காடு மானியம்.
  • வேளாண் பொருட்களை நாடு முழுவதும் நல்ல விலைக்கு விற்க, மாநிலங்களுக்கிடையே விளை பொருட்களை தடையின்றி கொண்டுச் செல்ல சட்ட திருத்தம் செய்யப்படும்.
  • நிலக்கரி துறையில் முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு. துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம். நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் பகிர்வு அடிப்படையில் நிலக்கரி, சுரங்கத்துறையில் வர்த்தக ரீதியிலான அனுமதி. 500 நிலக்கரி படுகைகளில் மீத்தேன் வாயு எடுக்க ஏலம் விடப்படும்.
  • ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில ஆயுதங்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும். பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா திட்டத்தை கவனமாக நடைமுறைப்படுத்தப்படும். பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக அதிகரிப்பு.
  • விமான போக்குவரத்து வழித்தடங்களை சீரமைத்து ரூ.1,000 கோடி அளவில் நிதி மிச்சம் செய்யப்படும். விமான நிலையங்களில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்த திட்டம். விமான நிலையங்கள் பராமரிப்பு, அதன் சேவைகளை தனியார் துறைக்கு அதிகளவில் அனுமதி வழங்கப்படும்.
  • மின்சாரத் துறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மையமாக்கப்படும்.
  • விண்வெளித்துறையில் தனியார் துறை பங்களிப்பு இனி அனுமதிக்கப்படும். இஸ்ரோ விண்வெளி அமைப்பை தனியார் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள இனி அனுமதி வழங்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details