தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்ல ராஜா' - ரெங்கராஜன்

காந்திநகர்: இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமில்லை என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.

Rengarajan

By

Published : Nov 23, 2019, 8:11 AM IST

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் எனத் தனது முதல் நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயித்தது.

அதேவேளை, கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்து மோசமாகி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டு 8.2 விழுக்காடு ஜி.டி.பி. வளர்ச்சியிலிருந்த நிலையில் தற்போது அது 6.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதையும் பாருங்க: சிதம்பர(ம்) பார்வையில் பட்ஜெட் 2019-20

நாட்டின் பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரெங்கராஜன், 'தனது இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியா 9 விழுக்காடு வளர்ச்சியில் நகர வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள இலக்கு தற்போதைய அளவைக்காட்டிலும் இரு மடங்காகும். எனவே, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது வாய்ப்பே இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

'வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைய நாட்டின் தனிநபர் வருமானம் 12 ஆயிரம் அமெரிக்க டாலராக உயர வேண்டும். தற்போது உள்ள வளர்ச்சியை வைத்துக்கொண்டு அந்நிலையை அடைய இன்னும் 22 ஆண்டுகள் பிடிக்கும்' என ரெங்கராஜன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பொதுத்துறை தனியார் மய முன்னெடுப்பு பொருளாதாரச் சீரமைப்புக்கு கைகொடுக்குமா?

ABOUT THE AUTHOR

...view details