தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கொரோனா பீதி - அமெரிக்க ரிசரவ் வங்கி வட்டிக் குறைப்பு - கொரோனா தக்குதல் அமெரிக்கா

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையைப் போக்கும் வகையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி வரிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

USA
USA

By

Published : Mar 4, 2020, 10:57 AM IST

உலகம் முழுவதும் கொரோனா பீதி தொற்றியுள்ள நிலையில், இதன் காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்படும் அபாயம் நிலவியுள்ளது. இதைத் தடுக்கும் விதமாக அமெரிக்க ரிசர்வ் வங்கி வரிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியாக செயல்படும் "பெடரல் ரிசர்வ் சிஸ்டம்' நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் பொருளாதாரம் அடிப்படையில் வலிமையாக உள்ளது. இருப்பினும் கொரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வட்டிக்குறைப்பு நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான அமெரிக்க இது போன்ற திடீர் வட்டிக்குறைப்பு நடவடிக்கையை அவசரக் காலங்களில் மட்டுமே செயல்படுத்தும். இதற்கு முன்னர், 2008ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய பொருளாதார மந்த நிலையின் போது இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா தலைக்காட்டத் தொடங்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அவசரகால வட்டிக்குறைப்பை அமெரிக்க செய்துள்ளது. இதன் தாக்கம் உலகச் சந்தையிலும் எதிரொலிக்கும் என பொருளாதார நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் அளித்த ட்விட்டர் நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details