சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக வர்த்தக மோதல் இருந்து வந்தது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையிலான சந்திப்பின் போது, சீனப் பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது.
இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்திருந்தன. இச்சூழலில் அமெரிக்கா, சீனா நாடுகள் இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.