தற்போது உலக நாடுகளின் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் உள்ளனர். உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. அப்படிப்பட்ட உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கியை தொடர்ந்து தன் வசம் வைத்துகொள்ளும் அமெரிக்கா! - David Malpass
வாஷிங்டன்: உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்கரான டேவிட் மால்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமெரிக்கரே தேர்வு செய்யபடுவதால், இது உலக நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக வங்கியின் செயற்குழு எந்த வித போட்டியுமின்றி 63 வயதான டேவிட் மால்பாஸை தற்போது தலைவராகத் தேர்வு செய்துள்ளது. தற்போது இருக்கும் அமைச்சரவையில் டிரம்ப் நிதித்துறை துணை அமைச்சராகவும், சர்வதேச கருவூல விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பையும் வகிக்கிறார்.
இந்த நிலையில், ஜிம் யோங் கிம் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதையடுத்து, அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்ததையடுத்து புதிய தலைவராக டேவிட் மால்பாஸ் தேர்வாகியுள்ளார். இவர் உலக வங்கியின் 73வது அமெரிக்கத் தலைவராவார். மேலும், வரும் 9ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக டேவிட் மால்பாஸ் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், உலக வங்கியின் தலைவராகப் பொறுப்பு வகித்த அனைவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.