கடந்த ஒருவார காலமாகவே பொருளாதர சூழல் காரணமாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவரும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 28 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது நேற்றைய தங்கத்தின் விலையிலிருந்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய முன்தினம் (செப்டம்பர் 30) தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இன்றைய வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 48 ரூபாய் 20 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய வெள்ளியின் விலையை விட 50 காசுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.