தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'தூங்கி விழுந்த உறுப்பினர்கள்!' -  நிதியமைச்சரின் அடேடே விளக்கம் - நிர்மலா சீதாராமன் நாட்டின் மந்தநிலை

டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில்தான் உள்ளது வீழ்ச்சியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கமளித்துள்ளார்.

Nirmala sitharaman
Nirmala sitharaman

By

Published : Nov 28, 2019, 12:19 PM IST

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை காணப்படுவது உண்மைதான். இந்த தற்காலிக சரிவை பொருளாதார வீழ்ச்சியென மிகைப்படுத்தக் கூடாது. தேக்கத்திலிருக்கும் ஆட்டோமொபைல் துறை மீண்டும் எழுச்சியைக் காண தொடங்கியுள்ளது. நாட்டின் நலனுக்காக ஒவ்வொரு முடிவையும் ஆராய்ந்து மத்திய அரசு எடுத்துவருகிறது என்றார்.

மத்திய அமைச்சரின் உரையின்போது அவையிலிருந்த சில உறுப்பினர்கள் தூங்கி விழுந்தனர். நிர்மலா சீதாராமனின் அருகிலிருக்கும் உறுப்பினரே தூங்கிவிழுந்த காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாட்டின் மந்தநிலை குறித்த விவாதத்தில் உறுப்பினர்களே மந்தமாக இருப்பதாகப் புகைப்படங்களையும் காணொலிகளையும் பரப்பி நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

இதையும் படிங்க : ஒரு மாதமாக கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த ராகுல் காந்தி - விரைவில் ஜார்க்கண்டில் பரப்புரை!

ABOUT THE AUTHOR

...view details