தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சென்செக்ஸ் 58 ஆயிரம் புள்ளிகளாக சரிந்தது - sbi sensex pts

இரண்டு நாள்களாக எழுச்சி கண்ட இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் இன்று சரிந்தன.

sensex-ends-143-pts-lower-nifty-gives-up-17550
sensex-ends-143-pts-lower-nifty-gives-up-17550

By

Published : Feb 4, 2022, 9:32 PM IST

டெல்லி:2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றும், நேற்று முன்தினமும் பங்கு சந்தை எழுச்சி கண்டது. சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. ஆனால் இன்று சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிந்தன.

அதன்படி சென்செக்ஸ் 143.20 புள்ளிகள் சரிந்து 58,597.02 எனவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 43.90 புள்ளிகள் சரிந்து 17,516.30 எனவும் வர்த்தகமாகின. உலோகம் சார்ந்த பங்குகள் சிறிது எழுச்சியை கண்டாலும், நிதியியல், தகவல் தொழில்நுட்பம், எரிவாயு பங்குகளில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சரிவை கண்டன.

குறிப்பாக எஸ்பிஐ புள்ளிகள் 1.92 விழுக்காடு சரிந்தது. அதேபோல எம்&எம், என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் புள்ளிகளும் சரிந்தன. இருப்பினும் கச்சா எண்ணெய் பேரலுக்கு 1.22 விழுக்காடு உயர்ந்து 92.22 டாலராக வர்த்தகமாகியது.

இந்தாண்டு பட்ஜெட்டில்2022-23 ஆம் ஆண்டு தொடங்கி 2025ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்திற்கும் ஆப்டிக்கல் பைபர் திட்டம், அனைத்து கிராமங்களும் இ-சேவை திட்டத்தின் கீழ் இணைக்கப்படும், நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை, மின்சார வாகனங்களில் பேட்டரியை சார்ஜ் போட்டுக்கொள்வதற்கு பதிலாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திட்டம், வேளாண் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு, நடப்பாண்டில் 5ஜி ஏலம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பட்ஜெட் 2022 எதிரொலி: 59 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details