தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி - தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி

வியாழக்கிழமை தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடு எண் சென்செக்ஸ் தனது புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Sensex record high

By

Published : Oct 31, 2019, 6:44 PM IST

இந்தியப் பொருளாதாரத்தில் எந்தச் சீர்திருத்தமோ நடவடிக்கையோ அரசால் இந்த வாரம் எடுக்கப்படவில்லை. மேலும், எந்தவிதமான அறிவிப்புகளும் நிறுவனங்கள் தரப்பில் வெளியிடப்படவில்லை. இது இப்படியிருக்க இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தனது புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.08க்கு வர்த்தகமானதும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 3860.00 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவதும் சர்வதேச சூழல்கள் அமைதியாக மந்தநிலையில் இருப்பதைக் காட்டுகிறது. வர்த்தக நிலை இப்படியிருந்தும், சென்செக்ஸ் உயர்ந்ததற்கு காரணம் நிறுவனப் பங்குகளின் செயல்பாடுகள்தான்.

பாமாயில் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கவில்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இன்று சென்செக்ஸ் 30 குறியீட்டில் பட்டியலிடப்பட்ட இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ., டாடா மோட்டார்ஸ், சன் பார்மா என சில பங்குகள் நல்ல விலையில் ஏற்றம் கண்டு வர்த்தகமானது. அதே நேரத்தில் சென்செக்ஸ் 30 குறியீட்டில் அதிக மதிப்புடைய முதல் 5 பங்குகளான ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய ஐந்து பங்குகளில் ரிலையன்ஸ் தவிர, மற்ற நான்கு பங்குகளும் விலை ஏற்றத்தில் வர்த்தகமானது.

இந்தியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்

பங்குகளின் ஏற்றத்தால்தான் சென்செக்ஸ் தன் புதிய வரலாற்றினை படைத்திருக்கிறது என்பதை சென்செக்ஸில் வர்த்தகமாகும் பங்குகளின் நிலையைப் பார்த்தாலே புரியும். பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில் மொத்தம் 2,227 பங்குகள் வர்த்தகமாகிறது. அதில் 61 பங்குகளின் விலை 52 வாரம் ஏறுமுகத்திலும் 83 பங்குகளின் விலை 52 வாரம் இறங்குமுகத்திலும் வர்த்தகமாகின.

தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி

இன்றைய வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77 புள்ளிகள் அதிகரித்து 40 ஆயிரத்து 129 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 877 புள்ளியில் இன்றைய வர்த்தகத்தை நிறைவுசெய்தது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று தளர்ந்து 71.08 ரூபாயாகத் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ABOUT THE AUTHOR

...view details