நாட்டின் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதில் திவால் சட்டம் எனப்படும் ஐ.பி.சி. சட்டம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் பட்சத்தில் திவால் சட்டம் மூலமாக நிதிச்சுமையிலிருந்து நிறுவனத்தை வெளியெடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
மத்திய அரசின் திவால் சட்டத்திருத்தத்தை உச்சநீதிமன்றம் ஏற்பு - வீடு வாங்குவோர்
டெல்லி: அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த திவால் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கென ரியல் எஸ்டேட் சட்டம் பிரத்யேகமாக உள்ளது. அண்மையில், கொண்டுவரப்பட்ட திவால் சட்டத்திருத்தமானது ரியல் எஸ்டேட் சட்டத்திற்கு பொருந்துமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, கட்டுமானத் துறையினர் சார்பில் 180 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான விசாரணை நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையில் நடைபெற்றது. ரியல் எஸ்டேட் துறைக்கான சட்டமானது திவால் சட்டத்துடன் ஒருங்கிணைந்தே செயல்படும் எனவும், திவால் சட்டம் ரியல் எஸ்டேட் துறைக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசு சில திருத்தங்களைச் செய்து தரவேண்டும் எனவும் நீதிமன்றம் வழிகாட்டுதல் விடுத்துள்ளது.