கரோனா பூட்டுதல் (லாக்டவுன்) நடவடிக்கை காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரும் முடக்கத்தில் உள்ளன. ஏற்கனவே நாட்டில் நிலவிவந்த பொருளாதார மந்தநிலை தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், தற்போதைய நெருக்கடி கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
மந்தநிலை காரணமாக தேவையில் சுணக்கம் ஏற்பட்டு தொழில் துறையினர் முதலீடுகளை சுருக்கிக்கொண்டனர். இதன் காரணமாக மின்சாரத் தேவை குறைந்து பெரும்பாலான மின் உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தித் திறனை குறைத்துக்கொண்டன.
நிதி நெருக்கடியில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிலிருந்து மீள்வதற்காக சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.