தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2020: சுற்றுலாவுக்கு ரூ.2500 கோடி, கலாசாரத்துக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு!

டெல்லி: சுற்றுலாத் துறையை மேம்படுத்தவதற்காக 2020-21ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாயும், கலாசார துறைக்கு மூன்றாயிரத்து 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Budget
Budget

By

Published : Feb 1, 2020, 3:07 PM IST

2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறைக்கான புதிய அறிவிப்புகள்

  • நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்விதமாக வரும் 2020-21 நிதியாண்டில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலமான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மூன்றாயிரத்து 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ், பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்து கல்விகளுக்காக 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் அண்டு கல்ச்சர்' என்ற பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.
  • ராக்கிகரி, ஹஸ்தினாபூர், ஷிவ்சாகர், தோலாவிரா, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி: கடும் வீழ்ச்சியில் பங்குச் சந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details