தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரூ.2,000 தாள்கள் அச்சடிப்பை நிறுத்தியது ஏன்? - ரிசர்வ் வங்கி விளக்கம் - ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் விளக்கம்

டெல்லி: ரூ.2,000 தாள்கள் அச்சடிப்பை நிறுத்தியது ஏன் என்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Rs 2,000 notes were not printed in 2019-20: RBI annual report
Rs 2,000 notes were not printed in 2019-20: RBI annual report

By

Published : Aug 26, 2020, 5:16 AM IST

ரிசர்வ் வங்கி நேற்று (ஆக. 25) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

''2019-20ஆம் ஆண்டோடு 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. 2018 மார்ச் மாதம் 33 ஆயிரத்து 632 லட்சம் எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இது 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 32 ஆயிரத்து 910 லட்சம் நோட்டுகளாக குறைந்தது. மேலும், 2020ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 27 ஆயிரத்து 398 லட்சம் எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருக்கின்றன.

ஒட்டுமொத்த ரூபாய் எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டின் பங்கு 2018 மார்ச்சில் 3.3 விழுக்காடு இருந்தது. அதன்பின் 2019ஆம் ஆண்டு மார்ச் முடிவில் 3 விழுக்காடாகக் குறைந்தது. இது 2020ஆம் ஆண்டு மார்ச் முடிவில் 2.4 விழுக்காடு அளவாகக் குறைந்துவிட்டது.

மதிப்பின் அடிப்படையில் 2018 மார்ச் மாதம் 37.3 விழுக்காடு இருந்த நிலையில், 2019 மார்ச் இறுதியில் 31.2 விழுக்காடாகச் சரிந்தது. 2020 மார்ச் முடிவில் 22.60 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேசமயம், ரூ.500, ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தின் அளவு, மதிப்பின் அளவு , எண்ணிக்கையின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், 2019-20ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி சார்பில் 2,000 ரூபாய் அச்சடிக்க, பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முந்த்ரன் பிரைவேட் லிமிட், செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட் ஆகியவற்றுக்குப் புதிதாக எந்த ஆர்டரும் வழங்கவில்லை.

ரூ.500 நோட்டுகளைப் பொறுத்தவரை 2018-19இல் ஆயிரத்து 169 கோடி எண்ணிக்கையில் அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டு, ஆயிரத்து 147 கோடி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இது 2019-20ஆம் ஆண்டில் ஆயிரத்து 463 நோட்டுகள் அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டு, ஆயிரத்து 200 கோடி நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன.

பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முந்த்ரன் பிரைவேட் லிமிட் (BRBNMPL), செக்யூரிட்டி பிரிண்டிங் அன்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட் (SPMCIL) ஆகியவை மூலம் 2019-20ஆம் ஆண்டில் ரூ.100 நோட்டுகள் 330 கோடி எண்ணிக்கையிலும், ரூ.50 நோட்டுகள் 240 கோடி எண்ணிக்கையிலும், ரூ.200 நோட்டுகள் 205 கோடி எண்ணிக்கையிலும், ரூ.10 நோட்டுகள் 147 கோடி எண்ணிக்கையிலும், ரூ.20 நோட்டுகள் 125 கோடி எண்ணிக்கையிலும் அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

2019-20ஆம் ஆண்டில் வங்கித் துறையில் இரண்டு லட்சத்து 96 ஆயிரத்து 695 எண்ணிக்கையில் போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது ரிசர்வ் வங்கியில் 4.6 விழுக்காடும், பிற வங்கிகளில் 95.4 விழுக்காடும் கண்டறியப்பட்டன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கள்ளநோட்டு கண்டுபிடித்தல் ரூ.10, ரூ.50, ரூ.200, ரூ.500 ஆகியவற்றில் முறையே 144.60 விழுக்காடு, 28.7 விழுக்காடு, 151.2 விழுக்காடு, 37.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ரூ.20, ரூ.100, ரூ.2000 ஆகியவற்றில் கள்ள நோட்டுகள் அளவு முறையே 37.7 விழுக்காடு, 23.7 விழுக்காடு, 22.1 விழுக்காடு குறைந்துள்ளது. ரூ.2000 நோட்டுகளில் 2018-19ஆம் ஆண்டில் 21 ஆயிரத்து 847 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 20 ஆகக் குறைந்துள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...நிதி திரட்ட பங்குகளை விற்கும் இந்திய வங்கிகள்!

ABOUT THE AUTHOR

...view details