ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்யும் விதமாக மத்திய அரசு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்சார்பு இந்தியா சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் வெளியான இந்த அறிவிப்பில் வேளாண்துறை, ஊரக வேலைவாய்ப்பு, சிறு,குறு தொழில் எனப் பல்வேறு தரப்புகளுக்கான நிதித்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்படி, சிறு, குறு நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார். பிக்கி அமைப்புடன் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் பேசிய அவர், ”சிறு, குறு நிறுவனங்கள் நிதி, வருவாய்ப் பற்றாக்குறை சந்தித்துவரும் இந்த வேளையில் அதைச் சீர்செய்யவே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.