தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பொருளாதாரத்தை சீரழித்த பாஜகவை தூக்கி எறியுங்கள் ப.சிதம்பரம் - ப சிதம்பரம் ஜிடிபி வளர்ச்சி

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை படுகுழிக்கு கொண்டு சென்ற பாஜக அரசை ஜார்கண்ட் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ப சிதம்பரம் ட்விட்டர்
ப சிதம்பரம் ட்விட்டர்

By

Published : Nov 30, 2019, 12:46 PM IST

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. நடப்பு காலாண்டின் வளர்ச்சி 4.5 விழுக்காடாக குறைந்துள்ளது. இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கவலையை தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'ஏற்கனவே எதிர்பார்த்தது போல் நாட்டின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 4.5 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆனால் பாஜக அரசு உண்மையை ஒத்துக்கொள்ளப் போவதில்லை' என பதிவிடப்பட்டுள்ளது.

ப சிதம்பரம் ட்விட்டர் பதிவு

மேலும், 'பொருளாதாரத்தை சீரழித்து மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்திவரும் பாஜக அரசை ஜார்கண்ட் மக்கள் தூக்கியெறிய வேண்டும். இது மக்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு' எனவும் பதிவிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஆரே பகுதியில் மரங்களை பாதுகாக்க உத்தவ் தாக்கரே அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details