தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காடாக தொடரும்' - சக்திகாந்த தாஸ்

வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்குச் செலுத்தும் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

By

Published : Aug 6, 2021, 10:58 AM IST

புதுடெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) 4 விழுக்காடாகவும் , ரிவர்ஸ் ரெப்போ 3.35 விழுக்காடாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து ஏழாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தேவையான காலம் வரை இந்த நிலைபாடு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலையின் பின்னடைவை சந்தித்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மெதுவாக மீண்டு வருவதால், நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது, பொருளாதார பின்னடைவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ், தடுப்பூசி செலுத்துவதற்கு சீரிய முறையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவை-விநியோகம் இடையிலான சமநிலையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசியல் பிரச்னைகளால் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நகரும் அமர ராஜா

ABOUT THE AUTHOR

...view details