நாட்டின் நிதி கொள்கை ஆய்வுக் கூட்டத்தை2 மாதங்களுக்கு ஒருமுறைமும்பையில்ரிசர்வ் வங்கி நடத்துவது வழக்கம்.ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும்அந்தக் கூட்டத்திற்கு, நாட்டின் வட்டி விகிதம் குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உண்டு. அந்த வகையில், இம்முறை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் அந்த ஆய்வுக்கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
இதில், ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையின் விளைவாக வங்கி வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அமையும்என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீடு, வாகன, சொத்துக்கடன்களைப் பெற்றவர்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியத் தர வர்க்கத்தினர் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.