ரெப்போ வட்டி குறைப்பு
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெப்போ வட்டி கால் சதவிகிதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
ஆக ரெப்போ வட்டி, ஒரே ஆண்டில் மட்டும் 1.35 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 5.40 சதவிகிதத்திலிருந்து கால் சதவிகிதம் குறைக்கப்பட்டு 5.15 சதவிகிதமாக உள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் கடந்த மூன்று நாள்களாக நடந்தது. அப்போது ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, ரெப்போ வட்டி சதவிகிதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அதன்படி, ரெப்போ வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் எதிரொலித்த ரெப்போ வட்டி குறைப்பு
மேலும் இந்தக் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவிகிதத்திலிருந்து 6.1 சதவிகிதமாகக் குறையும். இருப்பினும் 2020-21ஆம் நிதியாண்டில் 7.2 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட நிலையில் மதியம் 12 மணிநேர நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (பி.எஸ்.இ.) 34.90 புள்ளிகள் குறைந்து 38,071.97 ஆக வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ.) 16.10 புள்ளிகள் வீழச்சியடைந்து 11,297.90 என வர்த்தகம் ஆனது.
இதையும் படிங்க:
'கடன் சிக்கலிலிருந்து மீண்டுவரும் இந்திய வங்கிகள்!'