பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மூத்த நிர்வாக குழுவில் நடைபெற்ற மோசடி ரூ. 4,355 கோடி இழப்பிற்கு வழிவகுத்தது. பெரும் அளவில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, எந்த ஒரு பரிவர்த்தனை செய்தாலும் தன் அனுமதியோடு தான் செய்ய வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வங்கிகளில் முதலீடு செய்ய கலக்கம் அடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி இது குறித்து ரிசர்வ் வங்கி ட்வீட் செய்தது. இந்திய வங்கிகள் அனைத்தும் பாதுகாப்பாக தான் செயல்படுகிறது என்றும் வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.