மும்பை:மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கரோனா நோய்க் கிருமித் தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை அடியோடு முடக்கியுள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் (franklin templeton) நிறுவனம் ஆறு திட்டங்களை முடக்கியதையடுத்து, நிலைமையை ஆராய்ந்த ரிசர்வ் வங்கி, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தக் கடனுதவியை அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட விமான நிறுவனங்கள்! டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
நிலையான ரெப்போ விகிதத்தில் 90 நாள்கள் ரெப்போ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த கடனுதவியை அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.