டெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2.1 டிரில்லியன் (அதாவது ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி) வரை வெளி மூலதனம் தேவைப்படும், இந்தப் பற்றாக்குறையை சரிசெய்ய பெரும்பாலும் அரசாங்கத்தின் ஆதரவை வங்கிகள் எதிர்நோக்கும் என மூடிஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஆக.21) தெரிவித்துள்ளது.
மூடிஸின் கூற்றுப்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நிலவும் மந்தநிலை, கரோனா வைரஸ் பரவலால் மேலும் அதிகரிக்கிறது. இது பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) சொத்துகளை பாதிக்கும், மேலும் கடன் செலவுகளையும் அதிகரிக்கலாம்.
இது குறித்து மூடிஸ் துணைத் தலைவரும் மூத்த கடன் அலுவலரான அல்கா அன்பராசு கூறுகையில், “இந்தியாவை பொறுத்தமட்டில் பொதுத்துறை வங்கிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
பொதுவாக இந்த கரோனா பரவலுக்கு மத்தியில், பொதுத்துறை வங்கிகளின் முதலீடு குறைந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே அவர்களுக்கு வெளிமூலதனம் தேவைப்படும்.
எனவே அவர்கள் அரசாங்கத்தின் முதலீட்டை எதிர்பார்ப்பார்கள். மூடிஸ் நிறுவனம், கரோனா வைரஸ் பரவல் காரணமாக வங்கிகளில் மீண்டும் மூலதன பற்றாக்குறை என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.