தமிழ்நாடு

tamil nadu

நீண்டகால வளர்ச்சியின் மந்தநிலை இந்தியாவை பாதிக்கக்கூடும்: எஸ்.பி.ஐ அறிக்கை

By

Published : Jun 9, 2020, 3:00 AM IST

எஸ்பிஐயின் ஆராய்ச்சியான ஈகோவ்ராப் அறிக்கையின்படி, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்துவிட்டால் மற்றும் நிதியாண்டின்போது ஏற்ற இறக்கம் காட்டாவிட்டால், இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் நடப்பு கணக்கு உபரியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sbi
Sbi

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துவருவதால் அதன் பிடிப்பில் உள்ள துறைகள் சரிவை சந்திக்கும் என எஸ்.பி.ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐயின் ஆராய்ச்சியான ஈகோவ்ராப் அறிக்கையின்படி, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்துவிட்டால் மற்றும் நிதியாண்டின்போது ஏற்ற இறக்கம் காட்டாவிட்டால், இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் நடப்பு கணக்கு உபரியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21ஆம் ஆண்டுகளில் நமது வெளித் துறையைப் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நீண்ட கால வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, வெளித்துறை அளவீடுகளை, குறிப்பாக ரூபாயை பாதிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2016-17ஆம் நிதியாண்டு 8.3 விழுக்காட்டிலிருந்து 2019-20ஆம் ஆண்டு 4.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, 2021ஆம் நிதியாண்டின் சராசரி வளர்ச்சி வீக்கம் 5 விழுக்காடாக உள்ளது. கோவிட்-19 காரணமாக 2020ஆம் நிதியாண்டின் வளர்ச்சி 9 விழுக்காடுவரை சரிந்துள்ளதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

ABOUT THE AUTHOR

...view details