டெல்லி:சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வைக் கண்டித்து ஒன்றிய அரசை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், "இந்தியா முன்னேற்ற பாதையில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் பழைய சமையல் முறைகளான விறகு அடுப்புக்கு மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் பொருளாதார வளர்ச்சி என்பது, வாகனத்தில் ரிவர்ஸ் கியர் போன்று உள்ளது. அதிலும், அந்த வாகனத்தின் பிரேக் செயலிழந்து விட்டதாக தோன்றுகிறது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
வணிக பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு விலையை ரூ.266 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. டெல்லியில் 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு விலை 1,734 ரூபாயிலிருந்து 2000.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 266 உயர்வு