தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பொருளாதார நிலை குறித்து மத்திய இணையமைச்சரின் பகீர் விளக்கம் - சுரேஷ் அக்ஞாடி நரேந்திர மோடி

டெல்லி: நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது எனவும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கவே பொருளாதாரம் தொடர்பாக தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

Suresh Agnadi

By

Published : Nov 15, 2019, 11:25 PM IST

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி நாட்டின் பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இன்று பதிலளித்துள்ளார்.

நாட்டில் உள்ள பேருந்துகளில், ரயில்களில், விமானங்களில் கூட்டம் அலை மோதுவதாக தெரிவித்த சுரேஷ், நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொள்கின்றனர். எனவே நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுவதாக பகீர் விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்குக் களங்கம் கற்பிக்க பலரும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர். அவர்களே இத்தகைய பொய் பரப்புரையை மேற்கொள்வதாக நாட்டின் எதிர்க்கட்சிகள் மீது பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார், சுரேஷ் அங்கடி.

நாட்டில் மூன்றாண்டுக்கொரு முறை தேவையில் சுணக்கம் ஏற்படும் எனவும் இந்த சிக்கலெல்லாம் உடனடியாக சரியாகிவிடும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார், சுரேஷ்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் அங்கடி, பெல்காவி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தொடர்ந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 1330 பள்ளி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய திருவள்ளுவர் உருவம்!

ABOUT THE AUTHOR

...view details