தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஒரு விழுக்காட்டினரே வருமான வரி செலுத்துகின்றனர் - மத்திய அரசு - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்

நாட்டின் 138 கோடி பேரில் 1.46 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Tax
Tax

By

Published : Sep 22, 2020, 8:18 PM IST

நாட்டின் வருமான வரி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் வெளியிட்டுள்ளார்.

அதில், "2018-19ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி நாட்டில் 5.78 கோடி மக்கள் மட்டுமே வருமானவரி விவரத்தை தாக்கல்செய்துள்ளனர். அதில் 1.46 கோடி பேர் மட்டுமே ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளதாகக் கூறி வரி செலுத்துகின்றனர்.

நாட்டில் வரி ஏய்ப்பவர்களைக் கண்டறிந்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனைக்கு நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு) அவசியம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் பெரிதும் குறைக்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் நேர்மையான வரிசெலுத்துவோரை ஊக்குவிக்கும்விதமாக 'நேர்மையான வரி செலுத்துவோர்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details