இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பல ஆண்டுகளாக நிதிச்சுமையில் சிக்கித் தவித்துவருகிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகளை செய்துவரும் மத்திய அரசு, விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தது. இதையடுத்து சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுப்பெற்று சென்றனர்.
இந்த அறிவிப்பால் ஊழியருக்கான சம்பளத்தினால் ஏற்படும் நிதிச்சுமைக் கட்டுப்படுத்தப்பட்டது. அதேவேளை பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதால், பிஎஸ்என்எல் தனியாருக்கு விற்கப்படுமா என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்துவந்த நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி., எழுப்பிய கேள்விக்கு தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே பதிலளித்துள்ளார்.